மொக்கை கார்த்தியை
Posted by: gmohanraj on: 12/02/2009
எங்க ஏரியாவில் ‘மொக்கை கார்த்தியை’ தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக இருக்கும் மொக்கை கார்த்தி ஒருமுறை குடித்து விட்டு நடு ரோட்டில் மொக்கை போட்டதால் அவருக்கு இந்த பெயர். சுதந்திர பறவையான அவரை பற்றிய துணுக்கள் இங்கே.
- சமீப காலமாக தினமும் இரவு ஏதாவது ஒரு ராங் நம்பருக்கு போன் பண்ணி பிகர் கிடைத்தால் கடலை போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
- இடம், பொருள், வயசு, சைசு என எதையும் பார்க்காமல் கடலை போடுவது இவரது வழக்கம். போன வாரம் துணிக்கடைக்கு போயிருந்த போது அங்கிருந்த பொம்மையிடம் கூட ஒரு மணி நேரம் பேசியது ஹைலைட்.
- நமீதாவை மட்டுமே தலைவி என்றழைப்பார், ஷகிலாவை ரசித்த போதும் நமீதா அளவுக்கு வராதுடா என்பது இவர் கருத்து. இப்போது புவனேஸ்வரி மீதும் ஒரு கண் உண்டு.
- நீலமும், பச்சையும் பிடித்த கலர்கள்.. நீலப்படம் பார்ப்பதும், பச்சை பச்சையாய் பேசுவதும் தான் காரணம் என்று சொல்லுவார்.
- இவர் ஒரு கிரிக்கெட் பைத்தியம். கிரிக்கெட்டை பற்றி பேசுவது ரொம்ப புடிக்கும். மேட்ச் நடக்கும் போது யாருக்காவது போன் பண்ணி சச்சின் எத்தனை கோல் என்று கேட்டு கொண்டிருப்பார்.
- இது தவிர பச்ச குதிர தாண்டுதல், கோலி குண்டு என இன்னும் சில தேசிய விளையாட்டுகளிலும் ஆர்வம் உண்டு.
- எப்பவாவது மூடு சரியில்லை என்றால் மட்டும் தம்மடிப்பார், தம்மடிக்கும் போது மட்டும், பான்பராக் போடுவார், பான்பராக் போட்டால் மட்டும் லைட்டா தண்ணி அடிப்பார், போதையில் இருக்கும் போது மட்டும்….. மத்தபடி கெட்ட பழக்கம் எதுவும் இல்லை.
- சிக்கற பிகர் கூட எல்லாம் கடலை போட்டாலும், சில பிகர்களுக்கு மட்டும் தான் EC Recharge பண்ணி தருவார்.
- நல்ல அனுபவம் உள்ள ஆள்களுடன் மட்டும் தான் குடிக்க போவார், புது பசங்களோட போய் அவங்க மட்டையாயிட்டா சிக்கல் என்று காரணம் சொல்லுவார்.
- ஸ்கூல் பொண்ணுகளை பார்ப்பது இவருக்கு பிடித்த ஒன்று. பிடிக்காதது ஸ்கூல் பொன்னுகளோடு பேசுவது. ஏதாவது பேசினால் கூட்டத்தில் ‘அங்கிள்’ என்று சொல்லிடுவாங்களே என்று பயப்படுவார்.
- இவர் ஏரியா பலான தியேட்டரில் ரிலீஸ் ஆகும் எல்லா ஷகிலா படத்தையும் பார்த்திருக்கிறார். அந்த தியேட்டரில் இவருக்கு தனி அக்கவுண்ட் இருக்கிறது.
- குடிச்சுட்டு வீட்டில் இருக்கும் போதும், ஒயின் ஷாப் லீவு அன்றைக்கும் பிட்டு காட்சிகளை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு பிடிச்ச காட்சி _____
- A,B,C,D நாப்பது எழுத்து என்ற அளவில் ஆங்கிலம் தெரிந்திருந்த போதும் பேஷன் டிவியை இரவு முழுக்க பார்ப்பார்..
- ஆங்கில இசை சானல்களை அதிகம் பார்ப்பார். காரணம் இசை பிரியம் இல்லை. வால்யூமை மியூட் பண்ணி விட்டு ஷகிராவின் இடுப்பை ரசித்து கொண்டிருப்பார்.
- உலகமயமாக்களை எதிர்ப்பவர் என்ற போதிலும், பாரின் சரக்கு கிடைத்தால் சந்தோஷமாக குடிப்பார்.
- மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, ரோஸ் போன்ற கண்ணைப்பறிக்கும் வண்ண உடைகளையே அணிவார். அப்பத்தாண்டா நாலு பொண்ணுங்க திரும்பி பார்ப்பாங்க என்பார்.
- சைக்கிளே சரியாக ஓட்டத்தெரியாது என்றாலும், நண்பர்களின் பைக் மீது ஏறி உக்காந்து வித விதமாக படம் எடுத்துக்கொள்வார்.
- வீட்டில் இவரை தண்ணி தெளித்து எப்படியோ தொலஞ்சு போடா என்று விட்டு விட்டாலும், உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு தானே போய் சைட் அடித்து விட்டு, முதல் பந்தியில் சாப்பிடுவதை விரும்புவார்.
- படிக்கத்தெரியாது என்றாலும் படம் பார்ப்பதற்காகவே வண்ணத்திரைக்கும், சினிமா எக்ஸ்பிரஸ்க்கும் சந்தாதாரராக இருக்கிறார்.
- தளபதி நடிகர் தன்னை விட பர்சனாலிட்டியில் கம்மிதான் என்று நினைத்தாலும் அவரது அந்த கால சங்க கவி படங்கள் இவருக்கு ரொம்ப புடிக்கும்.
- எந்த மொழியும் எழுத படிக்க தெரியாதே தவிர, நிறைய மலையாள படம் பார்த்து மலையாளம் பேச கற்று கொண்டுள்ளார்.
- பெட் அனிமல் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும், அவர் ஏரியா ஒயின்ஷாப் அருகில் உள்ள ஒரு தெரு நாய்க்கு தினமும் பொறை வாங்கி போடுவார்.
- எப்பவாவது சரக்கு ஒத்துக் கொள்ளாமல் வாந்தி எடுத்து விட்டால், அது தனக்கு பெருத்த அவமானமாக கருதி அடுத்த நாள் முழுதும் குடிக்க மாட்டார்.
- நள்ளிரவில் வெளியே வரவே பயப்படும் அளவுக்கு வீரம் இருந்தாலும், நடக்கும் போது காலரை தூக்கி விட்டுக்கொண்டே நடப்பார்..
- பஸ்சில் போகும் போது எப்பவும் புட் போர்டில் தொங்கி கொண்டு தான் போவார். ஒருமுறை கீழே விழுந்து முன்னாடி மூணு பல் எகிறியபோதும் அந்த பழக்கத்தை மாற்றவில்லை.
Advertisement
Like this:
Be the first to like this post.