MohanRaj

சர்தார் ஜோக்ஸ்..

Posted by: gmohanraj on: 12/02/2009

இது எவரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு அல்லாமல் சிரித்து ரசிக்க மட்டுமே..
நான் மன்மோகன் சிங் ஆளும் நாட்டில் வாழ்பவன்.. ஹர்பஜன் சிங்கின் ரசிகன்..
அபியும் நானும் திரைப்படம் பார்த்தவன்..

(சர்தார் ஜோக்ஸை படிக்க விருப்பமில்லாதவர்கள் சர்தார் என்பதற்கு பதிலாக ஒரு பாகிஸ்தானி என்றோ நடிகர் அஜித் என்றோ போட்டுக் கொள்ளலாம்.. )

டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?

சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?

சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி.

*****************

இங்க்லீஷ் டீச்சர் சொல்கிறார், “எல்லோரும் கிரிக்கெட் மேட்ச் பத்தி ஒரு கட்டுரை எழுதுங்க”.

சிறுவர்கள் பரபரவென எழுத ஆரம்பிக்க, சர்தார்ஜியின் பையன் மட்டும் டக்கென எழுதிவிட்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்.

என்ன எழுதியிருக்கிறான் என இங்க்லீஷ் டீச்சர் ஆர்வத்துடன் பார்க்க, அதில் எழுதியிருந்தது.
“தொடர் மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது”

********************

நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து கேட்கிறார்.

“ஆர் யூ ரிலாக்ஸிங்?”

“இல்லை.. நான் பாண்டாசிங்.”

அந்தப் பெண் சென்றுவிட, மற்றொரு ஆள் வருகிறார். “ஆர் யூ ரிலாக்ஸிங்?”

“இல்லை..நான் பாண்டாசிங்.”

அந்த ஆளும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார். “ஆர் யூ ரிலாக்ஸிங்?”

கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாண்டாசிங், சர்தார் போலத் தோற்றமளித்த மற்றொரு நபரைப் பார்த்துக் கேட்கிறார். “ஆர் யூ ரிலாக்ஸிங்?”

“ஓ..யெஸ்… .ஐ ஆம் ரிலாக்ஸிங்.”

காதுகள் ஜிவ்வென ஆன பாண்டாசிங் கத்துகிறார் “அரே பச்சா… அங்கே எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க… நீ என்னடான்னா இங்க உட்காந்துருக்கியே”

***********************
நண்பர் : நீங்க ஷேக்ஸ்பியரைப் படிச்சிருக்கீங்களா?
சர்தார் : அதை எழுதியது யார்?
நண்பர் : ??!!

***

சர்தார் ஒரு பீட்ஸா ஆர்டர் செய்கிறார். சர்வர் அதைக் கொண்டு வந்து வைத்துவிட்டுக் கேட்கிறார்.
சர்வர் : ஆறு துண்டா வெட்டட்டுமா? அல்லது பன்னிரண்டு துண்டா வெட்டட்டுமா?
சர்தார் : ஆறு போதும். என்னால் பன்னிரண்டு சாப்பிடமுடியாது.
சர்வர் : ??!!

***

நண்பர் : ஓய்…அதோ செத்துக் கிடக்கும் பறவைகளைப் பாருங்க.
சர்தார் : (வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே) எங்கே…எங்கே?
நண்பர் மயக்கம் போட்டு விழுகிறார்.

***

வேலைக்கான விண்ணப்பம் ஒன்றை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்தார் சர்தார்ஜி. பெயர், வயது, முகவரி உள்பட அனைத்துக் கட்டங்களையும் விரைவாக நிரப்பிய அவர், சம்பள எதிர்பார்ப்பு என்னும் கட்டத்தில் எதை எழுதுவது எனக் குழம்பிப்போனார்.

தீவிர யோசனைக்குப் பின் எழுதினார் : “சம்பளம் வேண்டும்”

***

சர்தார்ஜி ஒரு டீவி வாங்க கடைக்குச் செல்கிறார்.
சர்தார் : உங்ககிட்ட கலர் டீவி இருக்கா?
விற்பனையாளர் : ஓ… இருக்கே.
சர்தார் : அப்படின்னா… பச்சைக்கலர் டீவி ஒன்னு கொடுங்க.

************

ஆசிரியர் : இன்று புத்தர் ஜெயந்தி. எல்லோரும் புத்தர் ஜெயந்தியைப் பற்றி சிறு குறிப்பு எழுதுங்கள் பார்க்கலாம்.

சர்தார் பையன் எழுதினான் : புத்தர் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த தத்துவவாதி. வாழ்க்கையின் உண்மையை அறிந்து ஞானம் பெற்றவர். ஆனால் ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது. அவருடைய மனைவியாக இருக்குமோ?!.

****

நபர் : உங்கள் பிறந்த நாள் என்றைக்கு?
சர்தார் : டிசம்பர் 17
நபர் : எந்த வருடம்?
சர்தார் : எல்லா வருடமும்…

****

நண்பர் : ஏன் மானிட்டரை துணியைவச்சு அடிக்கடி துடைச்சிக்கிட்டு இருக்கே?
சர்தார் : என்னோட டாஸ் வெர்சன்ல “க்ளியர்” கமாண்டு வொர்க் ஆக மாட்டேங்குது.

****

சர்தார் ப்ளாப்பி டிரைவில் ஒரு லெட்டரைத் திணித்துக் கொண்டிருக்கிறார்.
நண்பர் : ஹேய்…என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?
சர்தார் : இமெயில் அனுப்பிக்கிட்டு இருக்கேன்.

****

ஒரு நேர்காணலில் :

அதிகாரி : ஒரே ஒரு வார்த்தையில் அம்பது லெட்டர்ஸ் இருக்கு. அது என்ன தெரியுமா?
சர்தார் : போஸ்ட் பாக்ஸ்

****

சர்தார் : (தன் மனைவியிடம்) நான் வெளிநாட்டுக்காரன் மாதிரியா இருக்கேன்?!
மனைவி : இல்ல…ஏன் கேட்கிறீங்க?
சர்தார் : நான் லண்டன் போயிருந்தபோது ஒரு லண்டன் பெண் என்னைப் பார்த்து நீ வெளிநாட்டுக்காரனா அப்படினு கேட்டாள்.
(மனைவி தலையில் அடித்துக்கொள்கிறார்)

******************

Advertisement
Tags:

1 Response to "சர்தார் ஜோக்ஸ்.."

nice ……………….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Category

Tags

Posts

Follow Me

Calendar

December 2009
S M T W T F S
     
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 1 other follower

Flickr Photos

Ar

janani-iyer-1-9

janani-iyer-1-8

More Photos
Follow

Get every new post delivered to your Inbox.