MohanRaj

பொதுவாக மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் பிழிந்தெடுக்கின்றன என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கற்பனையே. (ஒருவேளை சில விஷயங்கள் உண்மையாகவும் இருந்துவிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!!)

மருத்துவ விடுப்பு

இந்த நிறுவனம் இனிமேல் மருத்துவச் சான்றிதழ்களை ஒப்புக் கொள்ளாது. உங்களால் டாக்டரிடம் செல்ல முடியுமானால் வேலைக்கு ஏன் வரமுடியாது?

அறுவை சிகிச்சை

இனிமேல் எந்த ஊழியரும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது. நீங்கள் இங்கு பணியாற்ற உங்கள் உடலின் எல்லா உறுப்புக்களும் தேவைப்படும்!! நாங்கள் உங்களுடைய முழு உடலுடன்தான் வேலைக்கு அமர்த்தியுள்ளோம். அப்படியிருக்க, உடலின் ஒரு பகுதியை எடுப்பது வேலை விதிகளை மீறியதாகக் கருதப்படும்.

வருட விடுமுறைகள்

ஒவ்வொரு ஊழியருக்கும் வருடத்தில் 104 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது, ஒவ்வொரு சனி, ஞாயிறும்.

விடுப்பு நாட்கள்

எல்லா ஊழியர்களும் வருடத்தில் ஜனவரி 1, ஜனவரி 26, ஆகஸ்ட் 15 ஆகிய தினங்களில் மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இறப்பு விடுப்பு

உற்றார் உறவினர் இறப்பிற்காக விடுப்பேதும் கிடையாது. அவர்கள் இறந்தபிறகு நீங்கள் போய் ஒன்றும் ஆகப்போவதில்லை. குறிப்பிட்ட ஊழியர் சென்றே ஆக வேண்டும் என அவசியம் இருந்தால் உடல் அடக்கத்தைப் பணிநேரம் முடிந்தபிறகு வைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் சற்று முன்னதாகவே வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றால் உணவு இடைவேளையின்போது வேலை செய்து அதை ஈடுகட்டிவிட இந்த நிறுவனம் அனுமதிக்கும். (ஒரே நிபந்தனை - உங்களது அன்றைய வேலையை பாக்கியில்லாமல் முடித்துவிட வேண்டும்)

உங்கள் இறப்பிற்கான விடுப்பு

இந்தக் காரணத்தை நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. ஆனால், நீங்கள் இதுபற்றி இரு வாரத்திற்கு முன்னாலேயே நிறுவனத்திற்குத் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் உங்களிடத்திற்கு வேறு ஒருவருக்குப் பயிற்சி அளிக்க முடியும்.
ஓய்வறை உபயோகம்

பல ஊழியர்கள் பெரும்பாலான நேரத்தை ஓய்வறையிலேயே செலவிடுவதாக அறிகிறோம். இந்த வழக்கத்தைத் தடுக்க, இனிமேல் ஊழியர்கள் அகர வரிசையில் ஓய்வறைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உதாரணமாகப் பெயரின் முதலெழுத்து அ வில் ஆரம்பிப்பவர்கள் காலை 8லிருந்து 8.20வரை. ஆ - 8.20லிருந்து 8.40 வரை என. ஒருவேளை அந்த நேரத்தில் உங்களால் செல்ல முடியவில்லையென்றால் நீங்கள் அடுத்தநாள் உங்கள் முறை வரும்வரை காத்திருக்க வேண்டும். ரொம்ப அவசரம் என்றால் நீங்கள் உங்கள் சக ஊழியருடன் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த மாற்றம் பற்றி எழுத்தில் தெரிவித்து உயரதிகாரியின் அனுமதி பெறவேண்டும்.

உணவு இடைவேளை

மிகவும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஒரு மணிநேரமும், சாதாரணமான உடலுடன் இருப்பவர்களுக்கு அரைமணி நேரமும், குண்டாக இருப்பவர்களுக்கு ஐந்து நிமிடமுமாக அவரவர் உடலுக்கேற்ற உணவிற்காக நேரம் ஒதுக்கப்படுகிறது.

உடை

உங்கள் சம்பளத்திற்கேற்ற உடையை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 5000 ரூபாய் சம்பாதிப்பவர் தினமும் 1500 ரூபாய் மதிப்பிலான உடை அணிந்தால் அவருக்கு இனி அதிகப் பணம் தேவையில்லை, அதனால் ஊதிய உயர்வு வேண்டாம் எனக் கருதப்படும்.

நீங்கள் நமது நிறுவனத்தின்மேல் காட்டிவரும் பற்றிற்கு நன்றி. நமது நிறுவனம் உங்கள் அனைவருக்கும் எல்லாவிதமான வசதிகளையும் செய்துதரப் பாடுபடுகிறது. அதனால் இந்த சுற்றறிக்கை பற்றிய தங்கள் எண்ணங்கள், யோசனைகள், கோபங்கள், குற்றச்சாட்டுகள், எரிச்சல்கள், ஏமாற்றங்கள் எதுவாக இருந்தாலும் வெளியே இது பற்றி விவாதித்துக் கொள்ளுங்கள். எங்களை அணுகாதீர்கள்.

நன்றி. வாழ்த்துக்கள்!

Tags:

பேச்சிலர் பட்ஜெட்

Posted by: gmohanraj on: 12/02/2009



Tags:

சர்தார் ஜோக்ஸ்..

Posted by: gmohanraj on: 12/02/2009

இது எவரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு அல்லாமல் சிரித்து ரசிக்க மட்டுமே..
நான் மன்மோகன் சிங் ஆளும் நாட்டில் வாழ்பவன்.. ஹர்பஜன் சிங்கின் ரசிகன்..
அபியும் நானும் திரைப்படம் பார்த்தவன்..

(சர்தார் ஜோக்ஸை படிக்க விருப்பமில்லாதவர்கள் சர்தார் என்பதற்கு பதிலாக ஒரு பாகிஸ்தானி என்றோ நடிகர் அஜித் என்றோ போட்டுக் கொள்ளலாம்.. )

டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?

சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?

சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி.

*****************

இங்க்லீஷ் டீச்சர் சொல்கிறார், “எல்லோரும் கிரிக்கெட் மேட்ச் பத்தி ஒரு கட்டுரை எழுதுங்க”.

சிறுவர்கள் பரபரவென எழுத ஆரம்பிக்க, சர்தார்ஜியின் பையன் மட்டும் டக்கென எழுதிவிட்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்.

என்ன எழுதியிருக்கிறான் என இங்க்லீஷ் டீச்சர் ஆர்வத்துடன் பார்க்க, அதில் எழுதியிருந்தது.
“தொடர் மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது”

********************

நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து கேட்கிறார்.

“ஆர் யூ ரிலாக்ஸிங்?”

“இல்லை.. நான் பாண்டாசிங்.”

அந்தப் பெண் சென்றுவிட, மற்றொரு ஆள் வருகிறார். “ஆர் யூ ரிலாக்ஸிங்?”

“இல்லை..நான் பாண்டாசிங்.”

அந்த ஆளும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார். “ஆர் யூ ரிலாக்ஸிங்?”

கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாண்டாசிங், சர்தார் போலத் தோற்றமளித்த மற்றொரு நபரைப் பார்த்துக் கேட்கிறார். “ஆர் யூ ரிலாக்ஸிங்?”

“ஓ..யெஸ்… .ஐ ஆம் ரிலாக்ஸிங்.”

காதுகள் ஜிவ்வென ஆன பாண்டாசிங் கத்துகிறார் “அரே பச்சா… அங்கே எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க… நீ என்னடான்னா இங்க உட்காந்துருக்கியே”

***********************
நண்பர் : நீங்க ஷேக்ஸ்பியரைப் படிச்சிருக்கீங்களா?
சர்தார் : அதை எழுதியது யார்?
நண்பர் : ??!!

***

சர்தார் ஒரு பீட்ஸா ஆர்டர் செய்கிறார். சர்வர் அதைக் கொண்டு வந்து வைத்துவிட்டுக் கேட்கிறார்.
சர்வர் : ஆறு துண்டா வெட்டட்டுமா? அல்லது பன்னிரண்டு துண்டா வெட்டட்டுமா?
சர்தார் : ஆறு போதும். என்னால் பன்னிரண்டு சாப்பிடமுடியாது.
சர்வர் : ??!!

***

நண்பர் : ஓய்…அதோ செத்துக் கிடக்கும் பறவைகளைப் பாருங்க.
சர்தார் : (வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே) எங்கே…எங்கே?
நண்பர் மயக்கம் போட்டு விழுகிறார்.

***

வேலைக்கான விண்ணப்பம் ஒன்றை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்தார் சர்தார்ஜி. பெயர், வயது, முகவரி உள்பட அனைத்துக் கட்டங்களையும் விரைவாக நிரப்பிய அவர், சம்பள எதிர்பார்ப்பு என்னும் கட்டத்தில் எதை எழுதுவது எனக் குழம்பிப்போனார்.

தீவிர யோசனைக்குப் பின் எழுதினார் : “சம்பளம் வேண்டும்”

***

சர்தார்ஜி ஒரு டீவி வாங்க கடைக்குச் செல்கிறார்.
சர்தார் : உங்ககிட்ட கலர் டீவி இருக்கா?
விற்பனையாளர் : ஓ… இருக்கே.
சர்தார் : அப்படின்னா… பச்சைக்கலர் டீவி ஒன்னு கொடுங்க.

************

ஆசிரியர் : இன்று புத்தர் ஜெயந்தி. எல்லோரும் புத்தர் ஜெயந்தியைப் பற்றி சிறு குறிப்பு எழுதுங்கள் பார்க்கலாம்.

சர்தார் பையன் எழுதினான் : புத்தர் இந்தியாவில் பிறந்தவர். சிறந்த தத்துவவாதி. வாழ்க்கையின் உண்மையை அறிந்து ஞானம் பெற்றவர். ஆனால் ஜெயந்தி யாரென்று எனக்குத் தெரியாது. அவருடைய மனைவியாக இருக்குமோ?!.

****

நபர் : உங்கள் பிறந்த நாள் என்றைக்கு?
சர்தார் : டிசம்பர் 17
நபர் : எந்த வருடம்?
சர்தார் : எல்லா வருடமும்…

****

நண்பர் : ஏன் மானிட்டரை துணியைவச்சு அடிக்கடி துடைச்சிக்கிட்டு இருக்கே?
சர்தார் : என்னோட டாஸ் வெர்சன்ல “க்ளியர்” கமாண்டு வொர்க் ஆக மாட்டேங்குது.

****

சர்தார் ப்ளாப்பி டிரைவில் ஒரு லெட்டரைத் திணித்துக் கொண்டிருக்கிறார்.
நண்பர் : ஹேய்…என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?
சர்தார் : இமெயில் அனுப்பிக்கிட்டு இருக்கேன்.

****

ஒரு நேர்காணலில் :

அதிகாரி : ஒரே ஒரு வார்த்தையில் அம்பது லெட்டர்ஸ் இருக்கு. அது என்ன தெரியுமா?
சர்தார் : போஸ்ட் பாக்ஸ்

****

சர்தார் : (தன் மனைவியிடம்) நான் வெளிநாட்டுக்காரன் மாதிரியா இருக்கேன்?!
மனைவி : இல்ல…ஏன் கேட்கிறீங்க?
சர்தார் : நான் லண்டன் போயிருந்தபோது ஒரு லண்டன் பெண் என்னைப் பார்த்து நீ வெளிநாட்டுக்காரனா அப்படினு கேட்டாள்.
(மனைவி தலையில் அடித்துக்கொள்கிறார்)

******************

Tags:

மொக்கை கார்த்தியை

Posted by: gmohanraj on: 12/02/2009

எங்க ஏரியாவில் ‘மொக்கை  கார்த்தியை’ தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வேலை எதுவும் இல்லாமல் வெட்டியாக இருக்கும் மொக்கை  கார்த்தி ஒருமுறை குடித்து விட்டு நடு ரோட்டில் மொக்கை   போட்டதால் அவருக்கு இந்த பெயர். சுதந்திர பறவையான அவரை பற்றிய துணுக்கள் இங்கே.

  1. சமீப காலமாக தினமும் இரவு ஏதாவது ஒரு ராங் நம்பருக்கு போன் பண்ணி பிகர் கிடைத்தால் கடலை போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
  2. இடம், பொருள், வயசு, சைசு என எதையும் பார்க்காமல் கடலை போடுவது இவரது வழக்கம். போன வாரம் துணிக்கடைக்கு போயிருந்த போது அங்கிருந்த பொம்மையிடம் கூட ஒரு மணி நேரம் பேசியது ஹைலைட்.
  3. நமீதாவை மட்டுமே தலைவி என்றழைப்பார், ஷகிலாவை ரசித்த போதும் நமீதா அளவுக்கு வராதுடா என்பது இவர் கருத்து. இப்போது புவனேஸ்வரி மீதும் ஒரு கண் உண்டு.
  4. நீலமும், பச்சையும் பிடித்த கலர்கள்.. நீலப்படம் பார்ப்பதும், பச்சை பச்சையாய் பேசுவதும் தான் காரணம் என்று சொல்லுவார்.
  5. இவர் ஒரு கிரிக்கெட் பைத்தியம். கிரிக்கெட்டை பற்றி பேசுவது ரொம்ப புடிக்கும். மேட்ச் நடக்கும் போது யாருக்காவது போன் பண்ணி சச்சின் எத்தனை கோல் என்று கேட்டு கொண்டிருப்பார்.
  6. இது தவிர பச்ச குதிர தாண்டுதல், கோலி குண்டு என இன்னும் சில தேசிய விளையாட்டுகளிலும் ஆர்வம் உண்டு.
  7. எப்பவாவது மூடு சரியில்லை என்றால் மட்டும் தம்மடிப்பார், தம்மடிக்கும் போது மட்டும், பான்பராக் போடுவார், பான்பராக் போட்டால் மட்டும் லைட்டா தண்ணி அடிப்பார், போதையில் இருக்கும் போது மட்டும்….. மத்தபடி கெட்ட பழக்கம் எதுவும் இல்லை.
  8. சிக்கற பிகர் கூட எல்லாம் கடலை போட்டாலும், சில பிகர்களுக்கு மட்டும் தான் EC Recharge பண்ணி தருவார்.
  9. நல்ல அனுபவம் உள்ள ஆள்களுடன் மட்டும் தான் குடிக்க போவார், புது பசங்களோட போய் அவங்க மட்டையாயிட்டா சிக்கல் என்று காரணம் சொல்லுவார்.
  10. ஸ்கூல் பொண்ணுகளை பார்ப்பது இவருக்கு பிடித்த ஒன்று. பிடிக்காதது ஸ்கூல் பொன்னுகளோடு பேசுவது. ஏதாவது பேசினால் கூட்டத்தில் ‘அங்கிள்’ என்று சொல்லிடுவாங்களே என்று பயப்படுவார்.
  11. இவர் ஏரியா பலான தியேட்டரில் ரிலீஸ் ஆகும் எல்லா ஷகிலா படத்தையும் பார்த்திருக்கிறார். அந்த தியேட்டரில் இவருக்கு தனி அக்கவுண்ட் இருக்கிறது.
  12. குடிச்சுட்டு வீட்டில் இருக்கும் போதும், ஒயின் ஷாப் லீவு அன்றைக்கும் பிட்டு காட்சிகளை பார்த்து கொண்டிருப்பார். அவருக்கு பிடிச்ச காட்சி _____
  13. A,B,C,D நாப்பது எழுத்து என்ற அளவில் ஆங்கிலம் தெரிந்திருந்த போதும் பேஷன் டிவியை இரவு முழுக்க பார்ப்பார்..
  14. ஆங்கில இசை சானல்களை அதிகம் பார்ப்பார். காரணம் இசை பிரியம் இல்லை. வால்யூமை மியூட் பண்ணி விட்டு ஷகிராவின் இடுப்பை ரசித்து கொண்டிருப்பார்.
  15. உலகமயமாக்களை எதிர்ப்பவர் என்ற போதிலும், பாரின் சரக்கு கிடைத்தால் சந்தோஷமாக குடிப்பார்.
  16. மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, ரோஸ் போன்ற கண்ணைப்பறிக்கும் வண்ண உடைகளையே அணிவார். அப்பத்தாண்டா நாலு பொண்ணுங்க திரும்பி பார்ப்பாங்க என்பார்.
  17. சைக்கிளே சரியாக ஓட்டத்தெரியாது என்றாலும், நண்பர்களின் பைக் மீது ஏறி உக்காந்து வித விதமாக படம் எடுத்துக்கொள்வார்.
  18. வீட்டில் இவரை தண்ணி தெளித்து எப்படியோ தொலஞ்சு போடா என்று விட்டு விட்டாலும், உறவினர் வீட்டு விஷேசங்களுக்கு தானே போய் சைட் அடித்து விட்டு, முதல் பந்தியில் சாப்பிடுவதை விரும்புவார்.
  19. படிக்கத்தெரியாது என்றாலும் படம் பார்ப்பதற்காகவே வண்ணத்திரைக்கும், சினிமா எக்ஸ்பிரஸ்க்கும் சந்தாதாரராக இருக்கிறார்.
  20. தளபதி நடிகர் தன்னை விட பர்சனாலிட்டியில் கம்மிதான் என்று நினைத்தாலும் அவரது அந்த கால சங்க கவி படங்கள் இவருக்கு ரொம்ப புடிக்கும்.
  21. எந்த மொழியும் எழுத படிக்க தெரியாதே தவிர, நிறைய மலையாள படம் பார்த்து மலையாளம் பேச கற்று கொண்டுள்ளார்.
  22. பெட் அனிமல் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும், அவர் ஏரியா ஒயின்ஷாப் அருகில் உள்ள ஒரு தெரு நாய்க்கு தினமும் பொறை வாங்கி போடுவார்.
  23. எப்பவாவது சரக்கு ஒத்துக் கொள்ளாமல் வாந்தி எடுத்து விட்டால், அது தனக்கு பெருத்த அவமானமாக கருதி அடுத்த நாள் முழுதும் குடிக்க மாட்டார்.
  24. நள்ளிரவில் வெளியே வரவே பயப்படும் அளவுக்கு வீரம் இருந்தாலும், நடக்கும் போது காலரை தூக்கி விட்டுக்கொண்டே நடப்பார்..
  25. பஸ்சில் போகும் போது எப்பவும் புட் போர்டில் தொங்கி கொண்டு தான் போவார். ஒருமுறை கீழே விழுந்து முன்னாடி மூணு பல் எகிறியபோதும் அந்த பழக்கத்தை மாற்றவில்லை.
Tags:

ல்லாம் தெரிந்த மனிதர்கள் செய்யும் தவறுகளில் முதலில் பாதிக்கப்படுவது ஒன்றுமே தெரியாத மனிதர்கள்தான் என்பார்கள்.

Life... Love... Hope...எய்ட்ஸ் நோய் பரவலுக்கு இந்த வழக்குச் சொல் முற்றுமுழுதாகப் பொருந்தும். மனிதர்களின் தவறுகளுக்கு முதல்பலியாக நிற்பது ஒன்றுமறியா பிஞ்சுக் குழந்தைகளோ.

அந்த பிஞ்சுகளைக் காப்பதில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டிய காலகட்டம் இது.

முதலில் இந்தக் கொடிய நோய் மழலைகளுக்குப் பரவும் வழிகளைத் தெரிந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லோராலும் முடியக்கூடிய காரியம்தான் இது. தாம் பெற்ற குழந்தைகள் மீதுதான் இந்த அதிகபட்ச கவனம் இருக்க வேண்டும் என்றில்லை… அடுத்தவர் குழந்தையும் மழலைதான். ஒன்றுமறியா பிஞ்சுகள்தான். அந்தக் குழந்தைகளுக்கு எந்த விதத்திலும் கொடிய நோய்க்கிருமிகள் தாக்க யாரும் காரணமாக இல்லாமல் இருந்தால் போதும். குறிப்பாக மருத்துவமனைகள் இதனை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

இந்த விழிப்புணர்வை உலகமெங்கும் பரப்பும் முயற்சியில் பலரும் இப்போது தீவிரமாக இறங்கியுள்ளனர். பிராட் பிட், ஏஞ்சலினா ஜுலி போன்ற பிரபலமான மனிதர்கள் இதற்கான முயற்சிகளில் உலகமெங்கும் ஆர்வத்தோடு களமிறங்கியுள்ளனர்.

இந்தியாவில் நடிகர் கமல்ஹாஸன் அதற்கான முயற்சிகளில் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டுள்ளார் என்பது பலரும் அறியாதது. கேன்சர் நோய் சிகிச்சை, முன்தடுப்பு முயற்சிகளில் அவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் ஏற்கெனவே இணைந்து செயல்படுகிறார். அதுமட்டுமல்ல, கேன்சர் சம்பந்தமான வழிகாட்டலுக்கு தனது கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாகவும் தனது இரு நெருங்கிய நண்பர்களை கேசன்சருக்கு பலிகொடுத்ததால் அதுபற்றி தனக்கு ஓரளவு தெரியும் என்று பொதுமேடையில் அறிவித்தவர் கமல்.

இப்போது எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு குறித்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்

ஒரு பகுதியாக உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி 1000 குழந்தைகளை தத்தெடுக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோய் எளிதில் தாக்குவது குழந்தைகளைத்தான்.

நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் எய்ட்ஸ் நோய் அதிகமான குழந்தைகளைப் பாதித்துள்ளது. சுகாதாரத்துறையின் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 2,651 குழந்தைகள் இந்த ஆண்டு புதிதாக எய்ட்ஸ் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

இன்று (டிசம்பர் 1) உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நடிகர் கமல்ஹாசன் எய்ட்ஸ் பாதித்த ஆயிரம் குழந்தைகளை தத்து எடுப்பதாக அறிவித்துள்ளார்.

kamal-aids adoptஇதுபற்றி கமல் பேசுகையில், “குழந்தைகள்தான் நமது எதிர்காலம். ஆனால் அவர்களில் சிலர் நம்பிக்கையின்மையின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது.

அவர்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பது நமது கடமை, பொறுப்பு. என்னை பின்பற்றி பலரும் இந்த சேவையை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

என்னை விட சிறந்தவர்களும், வசதியானவர்களும் இருக்கிறார்கள். நான் ஒரு இயக்கத்தை மட்டுமே தொடங்கி இருக்கிறேன் மற்றவர்கள் இதை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

வெல்டன் கமல்!

‘நான் புறக்கணிக்கிறேன்… இலங்கை தயாரிப்புகளை, கிரிக்கெட்டை!’

boycott-sri-lanka-04-dollarந்தக் கட்டுரை சற்று பெரிதாக இருக்கக்கூடும். இருந்தாலும் முழுவதுமாகப் படியுங்கள்…

“விக்டோரியா சீக்ரெட்.. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆயத்த ஆடைக் கடைகளுள் ஒன்று அது. கடைக்கு வெளியே தமிழர்கள் சிலர் கைகளில் இலங்கைப் பொருட்களை வாங்காதீர்கள் என்ற தட்டிகளுடன் நிற்கிறார்கள். அதைப் படித்துவிட்டு உள்ளே சென்ற ஒரு பெண், தனக்குத் தேவையான ஆடையை வாங்கிக் கொண்டு, நேராக வந்து தட்டி வைத்திருந்த தமிழரிடம் இப்படிச் சொன்னார்: “ஆம்… நான் உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். மதிக்கிறேன். இதோ பாருங்கள்.. நான் வாங்கியவற்றில் எதுவும் இலங்கைத் தயாரிப்பு இல்லை!”

- எனக்கு கண்களில் மளுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அடப் பாவிகளா… இந்த மனசு, இந்தியாவிலிருப்போருக்கும், இந்திய ஆட்சியாளர்களுக்கும் இல்லாமல் போய்விட்டதே என மனசு அழுதது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா… டெட்ராய்டுக்கு முதல் முதலில் நான் வந்தபோது, எல்லோரிடமும் என்னை இந்தியன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வேன். இப்போது நான் அப்படி சொல்லிக் கொள்வதில்லை. நான் ஒரு தமிழன் என்றுதான் சொல்லிக் கொள்கிறேன். அது ஈழமா, தாயகமா என்ற பேதம் எங்களுக்கானது. அதை நாங்களே பார்த்துக் கொள்வோம் என்ற உணர்வு வந்துவிட்டது. இன்னொன்று, தமிழன் என்று சொன்னால் என்னை கவுரவமாகத்தான் பார்க்கிறார்கள், இப்போது. தமிழன் என்ற அடையாளத்தை உலகமும் அங்கீகரிக்கிறது.

sawgrass2_08

என்வழி உள்ளிட்ட தளங்களில் இதுதொடர்பான செய்திகள் பார்த்தேன். இங்கே நண்பர்கள் நிறையப் பேர் பார்க்கிறார்கள். முடிந்த அளவு இந்த விஷயத்தை முதன்மைப்படுத்துங்கள். பலன் இருக்கும். பொருளாதார இழப்பின் வலி இலங்கைக்கு நன்கு தெரியும்…”

-இது அமெரிக்காவின் டெட்ராய்டில் முதலில் பணியாற்றி இப்போது பே ஏரியாவில் வசிக்கும் நண்பர் சக்திகுமார் நம்மிடம் சொன்னது.

நமது கட்டுரையைப் படித்தபிறகு அதற்கு பின்னூட்டமிட்டிருந்த நண்பர் கண்ணையா, இலங்கை பொருட்கள் புறக்கணிப்பு குறித்து மிகத் தீவிரமாக முன்மொழிந்திருந்தார். இந்தக் கட்டுரையை இத்தனை விரிவாக நாம் எழுதுவதற்கு அவரும்கூட ஒரு காரணம் என்பதை குறிப்பிடுவதில் தயக்கமில்லை. என்வழி என்பது எனக்கு மட்டுமே சொந்தமானதில்லை.. வழியில் பயணம் செய்யும் எல்லோருடையதும்தான்!

புறக்கணிப்பு ஏன்?

முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு முன்பு பிரிட்டனில் துவங்கப்பட்டது இலங்கைப் பொருட்கள் பகிஷ்கரிப்பு போராட்டம். கார்டியன், டைம்ஸ் ஆன்லைன் உள்ளிட்ட பல பத்திரிகைகள் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தன. பல கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடவும் செய்தன. வழக்கம்போல தமிழ்ப் பத்திரிகைகள், சேனல்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. இணையதளங்கள் (அதுவும் ஈழ ஆதரவு), மக்கள் தொலைக்காட்சி தவிர வேறும் யாரும் இதுபற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை, பேசவில்லை.

வன்னிப் போரின் இறுதிக் கட்ட பேரவலங்களை கண்கொண்டு பார்த்து, அந்த துயரச் செய்திகள் கேட்டு உறைந்து போயிருந்த தமிழர்கள், கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகு இந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்று இந்த புறக்கணிப்பு குறித்த செய்திகள் பரவத் தொடங்கிய பிறகு, நியாயமாக இந்தியாவிலிருந்தல்லவா இந்தப் புறக்கணிப்பு தொடங்கியிருக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது.

sawgrass2_06

அதற்கு முன் இந்திய – இலங்கை வணிகத்தின் அளவு என்ன என்பதையும் மிகச் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.

இலங்கையின் முக்கிய பொருளாதார ஆதாரம் இந்தியாதான். குறிப்பாக 2000 -ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியில் 838 சதவிகித (ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லை… 838 சதவிகிதம்தான்!) அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது இலங்கை அரசின் வர்த்தகத் துறை அமைச்சகம்.

2000-ம் ஆண்டில் வெறும் 55 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கையிலிருந்து இறக்குமதி செய்து வந்த இந்தியா, அடுத்த ஏழு ஆண்டுகளில் 600 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இறக்குமதியின் அளவை அதிகரித்தது.

இந்த நிதியாண்டில் அது இன்னும் பெருமளவு உயர்ந்திருக்கக் கூடும். ஆனால் தொடர்புடைய புள்ளி விவரங்களை இன்னும் வெளியிடவில்லை இலங்கை – இந்திய வர்த்தக அமைச்சகங்கள்.

அதேநேரம் அமெரிக்கா தனது இறக்குமதியைக் குறைத்துக் கொண்டுள்ளது. 2000-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு இலங்கையின் ஏற்றுமதி 2075 மில்லியன் டாலராக இருந்தது. அடுத்த சில ஆண்டுகளில் 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இன்று மேலும் குறைந்த வண்ணம் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதோ.. கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே இலங்கை இந்தியாவுக்கு 3 மில்லியன் ஆயத்தை ஆடைகளை அனுப்பியுள்ளது. இந்த ஏற்றுமதிக்கு நயா பைசா வரிவிதிக்கவில்லை இந்தியா என்பது நம்மில் புத்திஜீவிகள் என்று பீற்றிக் கொள்ளும் பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இந்தப் பொருள்தான் என்றில்லை, தடையில்லா ஏற்றுமதி என்று சிறப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் எந்தப் பொருளுக்கும் வரி கிடையாது.  இந்தியாவின் கொல்கத்தா, கொச்சி துறைமுகங்களும் இலங்கைக்கு இலவசமாகவே திறந்துவிடப்பட்டுள்ளன .

இன்னொரு பக்கம் இலங்கைக்குத் தேவையான பெருமளவு பொருள்களை அனுப்பி வருவது இந்தியாதான். அதற்கடுத்த நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளன.

இந்த மூன்று நாடுகளின் வாடிக்கையாளர்களும் முழுவதுமாகப் புறக்கணிக்க ஆரம்பித்தால்  இலங்கை ஏற்றுமதி வர்த்தகம் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதைக் காட்டவே இத்தனை விவரங்களும்.

இலங்கையைச் சுற்றிப்பார்க்க மிக அதிக அளவில் செல்லும் சுற்றுலாப் பயணிகளும் இந்தியர்களே. இவர்கள் பெருமளவு பயன்படுத்துவது இலங்கை விமான சேவையான சிறிலங்கா ஏர்லைன்ஸைத்தான். இந்தியர்கள் கைவிட்டால், இலங்கை விமான சேவை படுத்துக் கொள்ளும்!

பொருட்கள் கொடுக்கல் – வாங்கல் ஒரு பக்கம் இருந்தாலும், சேவைப் பிரிவு பெருமளவு சார்ந்திருப்பது இந்தியாவைத்தான்.

இப்போதைக்கு சேவைப் பிரிவை விட்டுவிடலாம். காரணம் அதில் அரசின் பங்களிப்பே அதிகம்! தனியார் துறையின் பெரிய நிறுவனங்கள் பங்களிப்பு இருந்தாலும் அவர்களின் தமிழுணர்வு அல்லது தமிழர்கள் மீதான பாசம் நமக்குத் தெரிந்ததே. எனவே இதில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.

எப்படி நாம் புறக்கணிப்பது… என்னென்ன பொருட்களைப் புறக்கணிப்பது… இது இலங்கைத் தயாரிப்பு என எப்படித் தெரிந்து கொள்வது?

இந்தக் கேள்விகள் மிக முக்கியமானவை. இலங்கையின் பிரதான ஏற்றுமதி கார்மெண்ட்ஸ், தேயிலை, நறுமணப் பொருட்கள், தோல் பைகள் மற்றும் தென்னை சார்ந்த பொருட்களே. இவற்றுக்கு நிச்சயம் நம்நாட்டிலேயே மாற்று தயாரிப்புகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் இந்த மாற்றுப் பொருட்கள் தாராளாமாகக் கிடைக்கின்றன.

எனவே எந்தப் பொருளிலெல்லாம் மேட் இன் சிறிலங்கா என எழுதப்பட்டுள்ளதோ, அவற்றை முற்றாகப் புறக்கணிப்போம். அந்தப் பொருளில் நமது தமிழ் சகோதர – சகோதரிகளின் ரத்த வாடை வீசுவதை மானசீகமாக உணருங்கள்!

இன்னும் ரப்பர், புகையிலை, உலர் பழங்கள், கடல் உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி என பல வகைப் பொருட்களில் இலங்கைத் தயாரிப்புகளை நீங்கள் பார்க்கலாம்.

தங்க நகை வாங்கும் தாய்மார்களே… நீங்கள் கல் வைத்த நகைகளை வாங்காதீர்கள். காரணம் பெருமளவு கற்கள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சிங்களர்கள் சார்ந்த அல்லது சிங்களர்கள் நடத்தும் வர்த்தக நிறுவனங்களைப் புறக்கணிப்பதன் மூலம் – அங்கே இந்தியப் பொருள்களே விற்றாலும் கூட -நமது உணர்வைக் காட்டலாம்.

நமது சகோதரர்கள் புலத்தில் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்துக்கு, சிறிய அளவிலாவது நமது பங்களிப்பை இதய சுத்தியோடு தருவோம்.

ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் அல்லது வேறு ஏதேனும் நாட்டு விமான சேவைகளை மட்டுமே பயன்படுத்துவோம்.

அடுத்து – விளையாட்டுத் துறையில் இலங்கை தொடர்பான அனைத்தையும் உடனடியாகப் புறக்கணிக்கத் துவங்கலாம்.

இப்போது இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இந்தப் போட்டித் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கலாம். நான் இலங்கை – இந்திய போட்டித் தொடரைப் பார்க்க மாட்டேன் என்ற உறுதி நிச்சயம் உங்களுக்கு நன்மையையே தரும். மதிப்புமிக்க உங்கள் நேரம் மிச்சமாகும். உங்களையும் அறியாமல் ஏதேனும் ஒரு உருப்படியான காரியத்தைச் செய்ய அது உதவக்கூடும்.

இந்தப் புறக்கணிப்பால் பாதிக்கப்படப் போவது யார்?

நிச்சயம் இந்தக் கேள்வி சிலரிடமிருந்து எழும். ஈழத்தில் வாழும் நமது சகோதரர்களும்தானே பாதிக்கப்படுவார்கள் என்றும் சொல்லக் கூடும். ‘எங்கள் நாட்டுத் தயாரிப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன… எனவே நானும் எங்கள் நாட்டு மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்’ என்று எந்த நாடும் சொல்லிவிட முடியாது. இதற்கும் பயங்கரவாதம் என்ற பொய்யைச் சொல்லி சர்வதேசத்திடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

இன்னொன்று, ஈழத்தில் இத்தனை நாளும் நடக்காத கொடுமையா… அவர்கள் பார்க்காத கஷ்டங்களா?

இதுவே தீர்வென்று சொல்ல வரவில்லை. ஆனால் இது வலி தரும் ஒரு அடி. இதுபோன்ற பலமுனை பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள்தான் இலங்கையைப் பணிய வைக்கும். இதனை எதிர்கொள்ள மீண்டும் சர்வதேச சமூகத்திடம்தான் போக வேண்டும் இலங்கை.

இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும்… இறுதிப் போரில் வென்ற அவர்கள், எதற்காக இத்தனை பதட்டம், குழப்பத்தில் தவிக்க வேண்டும்? போர்தான் ஓய்ந்து , மொத்த தமிழரும் சிறைப்பிடிக்கப்பட்டார்களே… அதன் பிறகும் ஏன் இந்த அவலம் தொடர்கிறது?

எனவே.. ‘சைடு எபெக்ட்’ இல்லாத மருந்துகளைத் தேடிக் கொண்டிருப்பதைவிட, அது குறைவாக உள்ள மருந்துகளுக்கு மாறுவத- காலச் சூழலுக்கு ஏற்ப- ஆரோக்கியமானதுதானே!

எனவே நண்பர் கண்ணையா பின்னூட்டத்தில் அனுப்பியதையே புறக்கணிப்பின் தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாம்…

“இலங்கை தயாரிப்புகள் என்று தெரியும் எதையும் நாம் முழுமையாக புறக்கணிப்போம். பயணத்துக்கு பிறநாட்டு விமானங்களையே உபயோகிப்போம்.

இலங்கை தொடர்பான அனைத்து விளையாட்டுக்களையும் புறக்கணிப்போம். இந்திய – இலங்கை கிரிக்கெட் போட்டியை முற்றுமுழுதாக பார்க்காமல் தவிர்ப்போம். அது தொடர்பான செய்திகளையோ, விவரங்களையோ யாருடனும் பகிர்ந்து கொள்ளவும் மாட்டோம்.

எமது ஈழத்து உறவுகளுக்கு நிம்மதியான, பாதுகாப்பான வாழ்க்கை அங்கே அமையும் வரை இந்தப் புறக்கணிப்பைத் தொடர்வோம்!

ஒரு தமிழனாக மட்டுமல்ல, மனித நேயத்தை வலியுறுத்தும், உணர்வுகளுக்குக் குரல் எழுப்பும் அனைவரும் இதனைப் பின்பற்றுமாறும் தங்களால் முடிந்த அளவு பரப்புமாறும் வேண்டுகிறோம்.  இது யாரையும் கட்டாயப்படுத்தும் நிர்பந்தமல்ல. உணர்வுகளைச் சொல்கிறோம்.. மனிதத்தை மதிப்பவர்கள் மதிப்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!”

நன்றி.

சென்னை: கனடாவில் அந்நாட்டு காவல் துறையினர் தனக்கு கைவிலங்கு மாட்டி துன்புறுத்தி, அவமானப்படுத்தியாதாக இயக்குனர் சீமான் புகார் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்தன்று உரையாற்றுவதற்காக கனடா சென்றிருந்த ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவரும், பிரபல இயக்குனருமான சீமான் அந்நாட்டின் டொராண்டோ நகரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார்.

இறையாண்மைக்கு எதிராகப் பேசவில்லை என்று சீமான் வாதிட்டாலும், கனடிய சட்டப்படி பிரிவினையைத் தூண்டும் செயலாகவே அவரது பேச்சு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார் கனடா போலீசாரால். விசாரணைக்குப் பிறகு கனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.

பக்குவமற்ற அணுகுமுறை

‘சீமான் போன்றவர்கள் வெளிநாடுகளில் உள்ள நடைமுறைகளைப் புரிந்து கொண்டு, தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி குடியேறிய நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பிவிடக் கூடாது. வெறும் உணர்ச்சிவசப்படுவதால் மட்டும் இப்போது ஏதும் நிகழ்ந்து விடப்போவதில்லை. இந்த அனுபவம் அவருக்கு பின்னாளில் உதவும்’, என்று  நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர் பின்னர் கருத்து தெரிவித்திருந்தார்.

நடந்தது என்ன?

இதற்கிடையே விசாரணையின் போது நடந்தது என்ன என்பது குறித்து இப்போது சீமான் விளக்கியுள்ளார்.

விசாரணை அதிகாரிகள் தன்னைத் துன்புறுத்தியதாகவும், தன்னுடைய கைகளில் விலங்கிட்டு சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரில் அழைத்துச்சென்று பல மணி நேரம் சம்பந்தமில்லாத பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும், புலிகள் ஆதரவு பேச்சுக்காக இந்தியாவில் எதிரப்கொண்ட வழக்குகள் எத்தனை என்பது குறித்தும் விசாரித்ததாக சீமான் கூறினார்.

இந்திய – சிங்கள அதிகாரிகளே காரணம்!

மேலும் அவர் கூறுகையில், “இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாமல் ஈழத் தமிழர்களுக்கு தனித் தாய்நாடு உருவாகும் வரை புலிகளையும், ஈழத்தமிழர்களையும் ஆதரித்து பேசுவேன்.

நவம்பர் 27ந் தேதி மான்ட்ரீல் நகரில் அனுசரிக்கப்பட இருந்த மாவீரர் தினத்தன்று என்னால் உரையாற்ற முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. சிவில் உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் கனடா நாட்டில் கூட தமிழனுக்கு பேச்சுரிமை மறுக்கப்பட்டது வேதனை அளிக்கிறது.

என்னை கைது செய்த கனடா அதிகாரிகள் இன்டர்போல் போலீசார் என்னை விசாரிப்பார்கள் என்று தெரிவித்தனர். அதன் பிறகு ஒரு சீக்கிய அதிகாரி வந்து என்னிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். ஆனால் கடைசி வரை அவர் தன்னை யார் என்றே என்னிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. கனடாவில் இருந்துதான் திருப்பி அனுப்பப்பட்டதற்கு இந்திய அதிகாரிகளும், சிங்கள அதிகாரிகளும்தான் காரணம்” என்றார் சீமான்.

உதவி இயக்குநர் கைது!

இந்நிலையில், சீமானின் உதவி இயக்குநர் மித்ரன் என்பவரை இன்று போலீசார் சென்னையில் கைது செய்தனர். பிரபாகரன் படத்தைக் கிழித்த இவிகேஎஸ் இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் அவருக்கு தொடர்புள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் இயக்கத்தைச் சேர்ந்த மேலும் இருவரும் கூட இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.

இவர்களிடம் விசாரித்ததில் மதுரை எஞ்ஜினியர் விஜயகுமார் என்பவர்தான் தங்களுக்கு பெட்ரோல் குண்டுகளைத் தயாரிக்க உதவியதாக கூறியுள்ளனர். நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்த விஜய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது 2009 -மாவீரர் நாள் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்களது வழிகாட்டுதலில் செயல் படுவோம் என்றும், புலம் பெயர்ந்து வாழும் எமது சொந்தகள் ஒன்று பட்டு போராட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.. எமக்காக குரல் கொடுத்த எமது தமிழ் சொந்தங்களுக்கு,தமிழ் நாடு சொந்தங்கள் ,புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர் ..

மேலும் உரையின் முழு வடிவம் …

தமிழீழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை கௌரவிக்கும் தேசிய நினைவெழுச்சி நாள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தின அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கை பின்வருமாறு :

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2009

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களே!

இன்று மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்துத் தனிப்பெரும் சக்தியாகத் திகழும் வீரமறவர்களை மனதாரப் பூசிக்கும் புனிதநாள்.

அர்ப்பணிப்பின் உச்சத்தைத் தொட்டு தாயகப் பற்றுறுதிக்கு உதாரணமாக விளங்கிய மாவீரர்களை இன்று நினைவு கூருகின்றோம். கடல்போல திரண்டுவந்த எதிரிகளை மனவுறுதியோடு எதிர்கொண்டு மோதிய எமது மாவீரர்கள் தாயக மண்ணின் மேன்மைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள். எத்தனையோ வல்லாதிக்கச் சக்திகள் எல்லாம் எதிரியோடு கைகோர்த்து வந்தபோதும் தாயக விடுதலைக் கொள்கைக்காகவே இறுதிவரை போராடி மடிந்தார்கள். தமது உயிருக்கும் மேலாக தாம் பிறந்த மண்ணையும் தம்மின மக்களையும் நேசித்த இம்மாவீரர்கள் தியாகத்தின் சிகரமாய் தனித்துவம் பெறுகிறார்கள்.

வரலாற்று ரீதியாக எம்மினத்துக்கென இருந்த தனித்துவமான அரச கட்டமைப்புக்கள் படிப்படியாக அன்னியப் படைகளால் வெற்றிகொள்ளப்பட்டன. பிரித்தானியர் இலங்கைத்தீவிலிருந்து வெளியேறியபோது இலங்கைத்தீவை ஒரே நாடாக்கி சிங்களவரிடம் கையளித்துவிட்டுச் சென்றார்கள். அன்று தொடக்கம் சிங்களப் பேரினவாதம் தமிழர்களது உரிமைகளைப் பறிப்பதிலேயே கவனம் செலுத்திவந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள். தனிச்சிங்களச் சட்டமென்றும் கல்வித் தரப்படுத்தலென்றும் தொடர்ந்த அடக்குமுறைகள் தமிழர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடும் நிலையைத் தோற்றுவித்தன. வன்முறையற்ற வழியில் போராடிய எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட வன்முறை வழியிலான அடக்குமுறைகளும், தமிழ் அரசியல் தலைவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பின்னர் சிறிலங்கா ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்களும் தமது உரிமைகளைப் பெற ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்ற நிலைக்கு தமிழ்மக்களை இட்டுச் சென்றது.

ஈழத்தமிழினத்தின் மீதான சிங்களப் பேரினவாத அடக்குமுறை காலத்துக்குக் காலம் அதிகரித்து இன்றைய நிலையில் அதியுச்சநிலையை அடைந்து தனது கோரமுகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. எமக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை தொடக்கத்திலிருந்தே படிப்படியாக மீறிவந்த அரசதரப்பு, மகிந்த ராஜபக்ஷ அரசதலைவர் ஆனதும் இன்னும் மோசமான முறையில் செயற்படத் தொடங்கியது. ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட தாயகப் பகுதிகளுடன் மீண்டும் புதிய நிலங்களுக்கான ஆக்கிரமிப்புப் போரை சிறிலங்கா அரசபடை தீவிரப்படுத்தியது. தென்தமிழீழத்தில் மாவிலாறில் தொடங்கிய நிலஆக்கிரமிப்பு யுத்தம் மென்மேலும் விரிவடைந்து தமிழர்களைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியது. முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச்சமர் மட்டும் நடாத்திக்கொண்டிருக்க, சிங்கள இராணுவம் மிகமோசமான முறையில் தனது படைநடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சிறிலங்கா இராணுவத் தரப்பின் வலிந்த தாக்குதல்களையும் யுத்தநிறுத்த ஒப்பந்த மீறல்களையும் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு கொண்ட சர்வதேச சமூகமோ பெயரளவில் சில அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு மெளனமாயிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புப் போரினால் எமது மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கத் தொடங்கினார்கள். சம்பூர், கதிரவெளி, வாகரை தொடங்கி தமிழரின் பூர்வீக நிலங்கள் அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் மூலம் எமது மக்கள் நெருக்கமாக அடைக்கப்பட்டு அரசபடைகளின் தாக்குதல்கள் மூலம் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகள், மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது குண்டுவீச்சுக்கள் நடாத்தப்பட்டன. எமது தரப்பு தற்காப்புப் போரை மட்டுமே நடத்திக் கொண்டிருந்ததையும், சிறிலங்காவின் ஒருதலைப்பட்சமான யுத்தநடவடிக்கையை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததையும் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட சிறிலங்கா அரசதரப்பு, அநீதியான போரொன்றின் மூலம் நிலங்களைத் தொடர்ச்சியாக ஆக்கிரமித்தது.

தென்தமிழீழ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து வடதமிழீழத்திலும் தனது நில ஆக்கிரமிப்பைத் தொடங்கியது சிறிலங்கா அரசாங்கம். வன்னியின் மேற்குப்பகுதியில் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக வன்னிமுழுவதும் விரிவாக்கப்பட்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயரத் தொடங்கினர். 2002 ஆம் ஆண்டு சர்வதேச அனுசரணையோடு செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகிக் கொள்வதாக சிறிலங்கா அரசதரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொண்டு தனது ஆக்கிரமிப்புப் போரை மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையிற்கூட யுத்த நிறுத்தத்துக்கும் அமைதிப் பேச்சுக்களைத் தொடர்வதற்கும் எமது விடுதலை இயக்கம் தொடர்ந்தும் முயற்சித்தது. இதற்கான எமது அறிவிப்புக்களையும் முயற்சிகளையும் முற்றாகப் புறந்தள்ளி தனது போர் நடவடிக்கைகளிலேயே குறியாக இருந்தது சிறிலங்கா அரசதரப்பு.

ஏற்கனவே 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலை அழிவிலிருந்து படிப்படியாக மீண்டுவந்துகொண்டிருந்த எமது மக்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைப் போரொன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. மக்கள்மேல் விதிக்கப்பட்ட பொருளாதாரத்தடை மக்களின் அன்றாட வாழ்க்கையை மிகவும் பாதித்தது. வன்னிப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களை வெளியேற்றியதனூடாக தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் சாட்சிகளில்லாமல் நடாத்தும் தனது திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்நிலைமையிலும் தற்காப்புப் போரைச் செய்தபடி யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப்பேச்சுக்களை மீளத் தொடங்கும்படியும் எமது இயக்கம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்காலத்தில் நிகழப்போகும் பாரிய மனித அவலங்கள், ஆபத்துகள் குறித்து நாம் சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் தெரிவித்த வண்ணமிருந்தோம்.

வன்னியில் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மோசமான நிலையை எட்டின. நாளாந்தம் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படவும் காயமடையும் அளவுக்கும் அரசபடைகளின் தாக்குதல்கள் அதிகரித்தன. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள். தம்மிடம் சரணாகதி அடைவது ஒன்றே தமிழ்மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென சிறிலங்கா அரசு கூறிநின்றது.

காயமடைந்த மக்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளும் அடுத்தடுத்துத் தாக்குதலுக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கையிட்ட ஒரே நாடாக சிங்கள தேசம் இடம்பெறுகிறது. இன அழிப்பின் இன்னொரு கொடூரமான அங்கமாக பாதுகாப்பு வலயம் என்று அரசு வானொலி மூலம் பிரகடனம் செய்த பின் அதே வலயத்திற்குள் பாதுகாப்புத் தேடிய அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல்களை நடாத்தியது. பாதுகாப்பு வலயம் கொலைக்களமாக மாற்றப்பட்டது. உயிரிழந்த உறவுகளைப் புதைக்கக்கூட அவகாசம் இல்லாமல் மக்கள் அடுத்த பாதுகாப்பு வலயத்திற்கு விரட்டப்பட்டனர். தொடர்ச்சியாகப் பல பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்திய அரசு கொலைவெறித் தாக்குதல்கள் மூலம் எமது மக்களை இராணுவத்தின் பிடியில் சிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது.

மருத்துவமனைகள், பாடசாலைகள், மக்கள் கூடுமிடங்கள், மக்கள் வாழ்விடங்கள் என்று தொடர்ச்சியான கொலைவெறித் தாக்குதல்களை நடாத்தி ஆயிரணக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசபடை. எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள்நின்று எம்மைக் காக்கவும் வளர்க்கவும் பாடுபட்ட எமது மக்கள் கோரமான முறையில் வேட்டையாடப்பட்டார்கள். பன்னாட்டு உதவிகளோடு நவீன ஆயுதங்களையும் யுத்த நெறிகளுக்கு மாறான கொடூர ஆயுதங்களையும் கொண்டு எமது மக்கள் மேல் சிறிலங்கா அரசு தாக்குதலை நடாத்தியது. கொத்துக் குண்டுகள், இரசாயன ஆயுதங்களான வெள்ளை பொஸ்பரஸ் எரிகுண்டுகள், தேர்மோபாரிக் குண்டுகள் என்பன வான், தரை, கடல் மார்க்கமாக அப்பாவிப் பொதுமக்கள் மீது ஏவப்பட்டன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா அரசால் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் என்ற மிகக்குறுகிய நிலப்பகுதிக்குள் மக்கள் நெருக்கமாக அடைபட்டிருந்த நேரத்தில், தாம் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியையும் மீறி எமது மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி அகோரத் தாக்குதலை நடத்தியது சிறிலங்கா அரசு.

எமது மக்களின் இந்த இழப்புக்களையும், ஆபத்துக்களையும் கருத்தில் கொண்டு நாம் பலதடவைகள் போர்நிறுத்த அறிவித்தல்களை மேற்கொண்டோம். அனைத்துலகச் சமூகத்திடம் பொதுமக்களை பெரும் இழப்புக்களில் இருந்து பாதுகாக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பினை நாம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற மக்கள் தமது நாடுகளின் ஊடாக இந்தக் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தாயகத்தில் அல்லலுற்றுக்கொண்டிருந்த மக்களுக்காக பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டுநின்று என்றுமில்லாத பேரெழுச்சியோடு கனவயீர்ப்புப் போராட்டங்களையும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் சாத்வீக வழியில் தொடர்ந்து முன்னெடுத்தார்கள். இதன் ஒருபடி மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரல்லாத வெளிநாட்டவர்களும் பங்குபற்றி வலுச்சேர்த்தார்கள்.

அதேநேரத்தில் எமது தமிழக உறவுகள் எம் மக்களின் மீதான இனப்படுகொலையைக் கண்டித்துக் கொந்தளித்தார்கள். அவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அங்கே பேரெழுச்சியை ஏற்படுத்தின. உணர்வாளர்கள் பலர் அர்ப்பணிப்பின் உச்சநிலைக்குச் சென்று தம்மையே தீயிற் கருக்கினார்கள். முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ மேலும் பரவி ஜெனிவாவின் முற்றத்தில் முருகதாஸ் வரை மூண்டிருந்தது. ஈழத்தமிழரின் அழிவையும் அவலத்தையும் தடுக்க உலகெங்கும் தன்னெழுச்சியாக நிகழ்ந்த தமிழ்மக்களின் போராட்டங்கள் பலனற்றுப் போயின.

உலக நாடுகள் தமிழ்மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பில் அக்கறை எடுக்காது பாராமுகமாக இருந்தன. கண்துடைப்புக்காக எடுக்கப்பட்ட சில நகர்வுகளைக்கூட சிறிலங்கா அரசாங்கம் தூக்கி வீசியது. அதேவேளை வன்னியில் எமது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் உச்சக்கட்டத்தைத் தொட்டிருந்தது. மக்கள் எங்குமே செல்ல முடியாதவாறு கனரக ஆயுதங்களைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டது சிங்கள அரசு. இதனால் சாவும் அழிவும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக உணவின்றி, மருத்துவ வசதிகள் இன்றி ஒரு குறுகிய இடத்திற்குள் இருந்து எமது மக்கள் வதைபட்டார்கள்.

சிங்கள அரச படைகளின் கையில் சிக்கினால் ஏற்படப்போகும் துன்பத்தை உணர்ந்த மக்கள் ஒரு பாதுகாப்பான மூன்றாம் தரப்பின் கண்காணிப்பில் செல்வதற்கே தயாராக இருந்தார்கள். அதுவரை எம்மக்களை சிங்கள அரசபடைகள் அணுகாதவாறு இறுதிவரை போராடினோம். சிறிலங்கா இராணுவ இயந்திரம் பாரிய ஆளணி வளத்தோடும் படைக்கலச் சக்தியோடும் தாயக மண்ணை ஆக்கிரமித்து முன்னேறியபோதும் தமிழரின் வீரமரபை நிலைநிறுத்திப் போர் செய்தோம். புலம்பெயர்ந்து வாழும் எமது மக்களின் எழுச்சியான ஆதரவோடும் தம்மையே தகனம் செய்யும் எமது சகோதரர்களின் ஒப்பற்ற அர்ப்பணிப்போடும் வீறுடன் போர் செய்தோம். ஆனால் எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங்களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. அனைத்துலகமும், ஐக்கிய நாடுகள் சபையும் வெறும் வார்த்தைகளால் மட்டுமே செயற்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் எதிரான இன அழிப்பைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் சமரசம் செய்து கொண்டிருந்தன. சிலநாடுகள் தமது அரசியல், இராணுவ அதிகாரிகளை அனுப்பி சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் ஆக்கமும், ஊக்கமும் அளித்தன.

இந்நேரத்தில் எமது மக்களை மிகப்பெரும் மனிதப் பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயற்பட்டவர்களும் முன்வைத்தார்கள். எமது போராட்டத்தையும் அரசியல் வேட்கையையும் புரிந்துகொள்ளாமல் தமது சொந்த நலன்களின் அடிப்படையில் எல்லோரும் செயற்பட்டார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆயினும் எமது நிலைப்பாட்டை அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கி வந்தோம்.

இறுதிநேரத்தில் எமது மக்களையும் காயமடைந்த போராளிகளையும் பாதுகாக்கும் நோக்கோடு சர்வதேச சமூகத்துடன் தொடர்புகொண்டு எம்மால் எடுக்கப்பட்ட உடனடி முயற்சிகளும் நாசகாரச் சதித்திட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கப்பட்டன. மிகவும் அநீதியான முறையில் தான்தோன்றித்தனமாக சிங்களத் தரப்பு நடந்துகொண்டது. வல்வளைப்புக்குள் அகப்பட்ட மக்கள் பலரைக் கோரமான முறையில் கொன்றொழித்தார்கள். உலகில் எங்குமே நடந்திராத கொடுமைகளை எல்லாம் எம்மக்கள் மீது சிறிலங்கா அரசபடை நிகழ்த்தியது. இம்மனிதப் பேரழிவில் இருபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

பன்னாட்டுச் சமூகமும் சிறிலங்கா அரச தரப்பும் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு தமது உயிரைப் பாதுகாப்பதற்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்கள் தடுப்புமுகாம்களில் குடிநீருக்குக் கூட வழியின்றி அடைக்கப்பட்டிருந்தார்கள். ஆறுமாதங்களைக் கடந்தபின்னும் இந்த அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமது போராட்டத்தோடு தோளோடு தோள்நின்ற மக்கள் பலர் இரகசிய தடுப்புமுகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதோடு இன்றுவரை அவர்களைப்பற்றிய தகவல் எதுவுமே வெளிவரவில்லை.

இதேவேளை சிறிலங்கா அரசபடையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் யுத்தக் கைதிகளைக் கையாளும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமைவாக நடாத்தப்படாமல் துன்பங்களை அனுபவித்த வண்ணமுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரினதும் விபரங்கள் சரிவர வெளிப்படுத்தப்படாமல், உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்படாமல், தொண்டு நிறுவனங்கள் அவர்களை அணுகவிடாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் நிலை துன்பகரமானது. அதிலும் பெண்போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முறையும் கையாளும் விதமும் கண்டிக்கத் தக்கவை. குறிப்பாக திருமணமான பெண்போராளிகளை அடைத்து வைத்திருப்பது, அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தடுத்து வைத்திருப்பது என்பன மிகவும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள். இவை தொடர்பில் காத்திரமான பணியை ஆற்றவேண்டிய தொண்டு நிறுவனங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் மெளனமாக இருப்பது வருத்தத்துக்குரியது. தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாக இவ்வமைப்புகளும் சர்வதேச சமூகமும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஓர் அப்பட்டமான இன அழிப்புப் போரை, புலிகளின் பிடியில் இருந்த மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை என்று கூறும் அரச பிரகடனம் வேடிக்கையானது. தமிழர் தரப்பில் உயிரிழப்புக்கள் ஏற்படாமல் நடாத்தப்பட்ட நடவடிக்கை என்ற இலங்கை ஜனாதிபதியின் கூற்று நகைப்பிற்கிடமானது. இந்தப் போர் தமிழ் மக்களுக்கு பெரும் உயிரிழப்பு , சொத்திழப்பு, வாழ்விட இழப்பு, சுய கௌரவ இழப்பு என்பவற்றை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத்தமிழினத்தின் பொருண்மிய இழப்பை அளவிட முடியாது. எமது மக்களின் பொருளாதார வளம் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது. எமது நிலங்களுக்குரிய மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் எமது இயற்கை வளங்களும் சொந்த நிலங்களும் சூறையாடப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலையை அடைந்துள்ளது.

எமது பாசமிகு தமிழ் மக்களே,

வன்னியில் நிகழ்ந்து முடிந்த மனிதப் பேரழிவைத் தொடர்ந்து எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து கொண்டிருக்கும் எமது மக்களின் பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாகவும் எமது அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேசத்தில் விரிவாக்கிக் கொண்டிருக்கிறோம். எமது அமைப்பின் அரசியற்கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்தச் செயற்பாடுகளையும் வழிமுறைகளையும்கூட குழப்புவதற்கும் ஒடுக்குவதற்கும் சிறிலங்கா அரசதரப்பு மிகக்கடுமையான முயற்சியில் ஈடுபடுகின்றது. உலகநாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகளூடான நகர்வுகளைச் செய்ய முற்பட்ட எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் கடத்துவது, கைது செய்வது, கைது செய்து தரும்படி அந்நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஜனநாயக வழியில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் முயற்சிப்பதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே சிங்களப் பேரினவாதம் இன்றுள்ளது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் நாளிலிருந்து, மாறி மாறி பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் அடையாளத்தை அழித்து தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எமது தாயக மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டு அவர்கள் தமது உணர்வுகளைச் சொல்லமுடியாதவாறு சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருகிறது. எமது மக்களுக்கு நீதியான, நியாயமான, கௌரவமான தீர்வைத் தருவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே தயாராக இருந்ததில்லை.

1956 இல் தொடங்கிய தமிழர்களுக்கு எதிரான வெளிப்படையான இனப்படுகொலை 2009 இல் உச்சக் கட்டத்தையடைந்தது. சிறிலங்கா அரசும் அதன் படைகளும் செயற்பட்டவிதம், குறிப்பாக இப்பாரிய மனிதப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்களப் பேரினவாதம் நடந்துகொண்ட முறை தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரிய மனிதப்பேரழிவைச் செய்து, தமிழர்களின் மனவுறுதியை உடைத்து, தாங்கள் நினைத்ததை தமிழர்கள்மேல் திணித்து இலங்கைத்தீவு முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவர சிங்கள அரசு விரும்புகிறது. அதன் ஒரு கட்டமாக அண்மையில் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலையும் வவுனியா நகரசபைத் தேர்தலையும் நடாத்தி தமிழ்த்தேசியத்தின் வீழ்ச்சியை உலகுக்குச் சொல்லலாமென எண்ணியது. ஆனால் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை தமிழீழ மக்கள் மீண்டுமொரு முறை தேர்தலில் வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

எம்மினத்தின் மேல் அக்கறை கொண்ட சர்வதேச நாடுகளின் கரிசனைகளையும் ஆலோசனைகளையும் கவனத்திற்கொண்டு சனநாயகப் பண்புகளை மதிக்கின்ற நாடுகளில் தாயக விடுதலையை முன்னெடுக்கும் அரசியற்கட்டமைப்புக்களை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் உருவாக்குவது காலத்தின் கட்டாயம். இவ்வாறு மக்களால் மக்களுக்காக அமைக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் தெரிவுசெய்யப்படுவதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறமுடியும். இக்கட்டமைப்புக்கள் ஊடாக பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப்பெற்று எமது உரிமைப்போராட்டத்தை சர்வதேசரீதியில் வலுப்படுத்த முடியும். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய எமது மக்களின் போராட்டத்துக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புக்களும் அதன் செயற்பாட்டாளர்களும் எமது இலட்சியமான தமிழீழத் தனியரசுக் கோட்பாட்டிலிருந்து விலகிப் போவதை தமிழ்மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

நீண்டகால அடிப்படையில் எமது தாயக விடுதலைக்கான போரினை பல்வேறு வடிவங்களில் உள்ளக வெளியக சூழல்களை கருத்தில் கொண்டு முன்னெடுத்துச் செல்லவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதேநேரம், தாயகத்தில் நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட எமது மக்களின் கட்டுமானங்களைச் சீரமைத்து, இடம்பெயர்ந்த மக்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தவேண்டிய பொறுப்பும் உலகத் தமிழர்களுக்கு உண்டு. அத்தோடு, மக்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் கண்களை மூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவைக்கும் முயற்சியிலும், சிங்கள அரசின் இன ஒடுக்கல் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு ஓயாது எடுத்துக் கூறுவதன் மூலமாக எமது உரிமைப் போராட்டத்திற்கான தார்மீக ஆதரவைப் பெறும் முயற்சியிலும் அனைத்துலகத் தமிழர்கள் தொடர்ந்தும் ஒற்றுமையுன் செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

அதேநேரம், தாயகத்திலுள்ள அனைத்து தமிழ் முஸ்லிம் கட்சிகளும் எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கடந்தகாலத்தில் செயற்பட்டதைப் போன்று இனிவரும் காலங்களிலிலும் ஒற்றுமையோடும் தன்னலமற்றும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். எமது இலட்சியப் பாதையில் அனைவரையும் அரவணைத்து, புதிய சூழல்கள், புதிய நட்புக்களைத் தேடி உலகத் தமிழர்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு எமது விடுதலையினை வென்றெடுக்க முன்வருமாறு இந்தப் புனித நாளில் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் எமது போராட்டத்துக்கான ஆதரவை பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியதோடல்லாமல் உலக அரங்கில் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உரத்து ஒலித்த எமது புலம்பெயர்ந்த உறவுகளை நன்றியோடு நினைவு கொள்கிறோம். புலம்பெயர்ந்த தமிழ் இளையோர்களின் நெறிப்படுத்தப்பட்ட பங்களிப்புக்களும் போராட்டங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அதேவேளை, எமது மக்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டு கொதித்தெழுந்து போராடிய தமிழகத்துச் சகோதரர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பான தமிழீழ மக்களே, புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, மாவீரர்களின் இலட்சியக் கனவு நிறைவேறும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். சிங்களத்துடன் இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது. சிங்களம் நீதி வழங்கும் என்று நினைப்பது பேதைமை. சிங்கள தேசத்தை நம்பி ஏமாறுவதற்கு உலகத் தமிழினம் தொடர்ந்தும் தயாராக இல்லை. தமிழினம் தன்னிகரற்ற வலுவாற்றல் மிக்க தனித்துவமான இனம். பண்பாட்டு வாழ்வையும் நீண்ட வரலாற்றையும் கொண்ட இனம். உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை போராடுவோம். வரும் சவால்களுக்கு முகம் கொடுப்போம். இடையூறுகளைத் தாண்டிச் செல்வோம், எதிர்ப்புச் சக்திகளை முறியடிப்போம், தாயகத்தின் விடிவிற்காகப் போராடுவோம். விடுதலைப் போரை வலுப்படுத்த உதவும் அனைத்துச் செயற்பாடுகளையும் மேற்கொள்ள அணிதிரளுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், எந்தத் தடைகள் வந்தபோதும் எமது உரிமைகளுக்காக இறுதிவரை போராடிய மாவீரர்கள் காட்டிய பாதையில் தொடர்ந்தும் போராடி தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம் என இந்நாளில் நாமனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தியின் கனவு, தமிழ் ஈழம்-அந்த தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்: சீமான் பேச்சு

இயக்குநர் சீமான் பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார்.

இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார்.

’’நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். நான் சிறைக்குப்போக அஞ்ச மாட்டேன். பதுங்கி இருந்தது நெல்லை சீமையில் பாயத்தான்! நான் எப்படியும் சாகப்போகிறேன். அது என் இனத்துக்காக என்றால் எனக்கு பெருமை தான்.

Read More

Create a Vision for Life, Get What You Want

Posted by: gmohanraj on: 12/02/2009

If you feel the human part of the world around you, your experience will be a cacophony of voices, thoughts and emotions, all an outpouring of confusions of many different levels and states.

When we are subjugated by a wrong perception of reality around us, the pain and suffering that we create for ourselves, the people around us and for all other life forms is unfortunate.

With all the conveniences and facilities we have because of science and technology, the individual and humanity as a whole have still remained in absolute confusion. If you are sensitive to the thoughts and emotions of people around you, you will see they are an absolute mess. There is no clarity, neither will nor vision. Most people live their lives without even knowing what it is that they really want for themselves. Or, even if they know what they want in their lives, they neither have the will nor the vision to create it. Most of the time, they are just settling for whatever is easy, whatever is within their reach. If we go by the experience of our past or if we trust our logical mind to decide what is possible and what is not, what is and is not attainable, then we will always go for mediocre things.

We are always trying to create our life based on the current reality around us. But whatever may be the situation we are in at this moment is not the point. Where we want to go to tomorrow need not be connected to where we are right now. What we want as the highest in life need not have anything to do with our present situation. If we enslave our visions to current situations, then we are once again settling for what is attainable, what is easy, what we think is possible. But what we think is possible or not possible is not the point. We need to see what our vision is, what the highest is we can seek in our life.

If you have a clear vision for yourself and the world around you, it is not beyond your capacity to create it. It may happen in this lifetime or the next or even later, but what you want will definitely come.

Whatever you know as the highest, just seek that out. It does not matter whether it is going to happen or not going to happen. Living with the vision itself is very elevating, very liberating, is a joyous process for any person. Whether it is going to happen tomorrow or after hundred years is not the point. You have a vision and you are not concerned about whether it is possible or not possible. You are not concerned whether it is easy or difficult, whether it is attainable or not attainable; you are not concerned about the end result. You just have a vision and you give your life towards it. This is one of the easiest ways to attain the highest to simply give yourself to what you want, not caring whether it is going to happen or not going to happen. This is a spiritual process by itself.

It is time to create a strong vision within ourselves as to what it is that we really care for, not just for today. If you look deep enough, your vision will be the universal vision. Seeking whatever you know as the highest with undivided attention is a way of knowing life here and beyond.

Category

Tags

Posts

Follow Me

Calendar

February 2012
S M T W T F S
« Dec    
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 1 other follower

Flickr Photos

Ar

janani-iyer-1-9

janani-iyer-1-8

More Photos
Follow

Get every new post delivered to your Inbox.